ஓய்வு உதவி காவல் ஆய்வாளர் மீது பெண் எஸ்பி அலுவலகத்தில் புகார்
86 லட்சத்தை பெற்றுக்கொண்டு,81 லட்சம் கேட்டு மிரட்டுவதாக ஓய்வு உதவி காவல் ஆய்வாளர் மீது பெண் புகார்;
தர்மபுரியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பர்கத் அலியின் மனைவி, மாமியார் ஆகியோர், டேக்கிஸ்பேட்டை யைச் சேர்ந்த பெண் ஒருவர் நடத்தி வரும் நிதி நிறுவனத்தில், சீட்டு கட்டிய பணம் 81 லட்சத்தை தராமல் மோசடி செய்து விட்டதாக வும், அந்தத் தொகையைப் பெற்றுத் தருமாறும் கடந்த 24ம் தேதி தர்மபுரி ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனு மீது காவலர்கள் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், தர்மபுரி டேக்கிஸ்பேட்டையைச் சேர்ந்த சுப்ரமணியன் மனைவி சரவணா என்பவர், தனது குடும்பத்துடன் இன்று மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில், நானும், எனது கணவரும் சேர்ந்து நடத்தி வரும் நிதி நிறுவனத்தில், ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் பர்கத்அலி சீட்டு குரூப்களில் சேர்ந்தார். முதிர்ச்சி அடைந்த தொகையை எங்களிடம் முதலீடு செய்தார். அதற்காக மாதந்தோறும் 78 ஆயிரம் வட்டி வாங்கி வந்தார். தொடர்ந்து என்னால் வட்டி தர முடியாது. நீங்கள் கொடுத்த பணத்தை திருப்பி வாங்கிக்கொள்ளுங்கள் என்று வலியுறுத்தியும், அவர் எனது கணவரை தொடர்ந்து மிரட்டி, கடந்த 2020ம் ஆண்டு வரை 30 லட்சம் வட்டியாக வாங்கிக் கொண்டார். மேலும், அதே வருடம் அவர் அசலாக கொடுத்த 26 லட்சத்தையும் கொடுத்து விட்டோம். நாங் கள் கொடுத்த பணத்திற்கு, அவர் எந்த விதமான ரசீதும் கொடுக்காமல், தொடர்ந்து எங்களை, மீண்டும் மிரட்டி, மேலும் 30 லட்சம் இதுவரை மொத்தம் 86 லட்சம் பணம் பெற் றுக் கொண்டு, என்னை யும், எனது மகனையும் தொடர்ந்து சீட்டு பணம் 81 லட்சம் வழங்க வேண்டும் என்று மிரட்டி வருகிறார். இது தொடர்பாக தர்மபுரி நகர காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்றால், எங்களையும், எங்களது வக்கீலையும் மிரட்டி வருகிறார். எனவே, ஓய்வு பெற்ற காவல் அதிகாரியிடம் இருந்து, எங்களுக்கு முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும்,சீட்டு பணத்தை பெற்றுக் கொண்டு எங்களை மிரட்டும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.