அரக்கோணத்தில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்
ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்;

அரக்கோணம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு கடந்த மாத பில் தொகை நிலுவையில் வைத்திருப்பதை கண்டித்தும், சுகாதார ஆய்வாளர் தங்களை தரக்குறைவாக பேசுவதாகவும் நகராட்சி அலுவலகம் முன்பாக திடீரென பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சுகாதார அலுவலர் வெயில் முத்து அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பேரில் பணியாளர்கள் கலைந்து சென்றனர்.