தக்கோலத்தில் திமுக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!
திமுக மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்!;

தக்கோலம் தேரடி பகுதியில் திமுக இளைஞரணி சார்பில் இந்தி மொழி திணிப்பு, தொகுதி மறு சீரமைப்பு, நிதி பகிர்வில் பாரபட்சம் ஆகியவற்றுக்காக மத்திய அரசை கண்டித்து நேற்று இரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். தக்கோலம் பேரூராட்சி தலைவர் நாகராஜன் அரக்கோணம் திமுக நகர செயலாளர் ஜோதி மற்றும் திமுகவினர் கலந்துகொண்டு பேசினார். பின்னர் தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.