
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு கலை சங்கமம் விழா நடத்தப்படுகிறது. அதேபோன்று நேற்று இரவு ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் முத்துக்கடை அருகில் கலை சங்கமம் விழா நடைபெற்றது. இதில் வாலாஜா வட்டாட்சியர் அருள் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை கண்டு களித்தார்