பெரம்பலூர் மாவட்டம் மாநகராட்சியாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக மாவட்ட கழக செயலாளர் நன்றி அறிக்கை
பெரம்பலூரை மாநகராட்சியாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.;

பெரம்பலூர் மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதற்கு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். பெரம்பலூர் மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டதற்கு பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை வருமாறு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் 25.03.2025, செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்ற மானியக் கோரிக்கை அறிவிப்புகளில், பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு புதிய குடிநீர் அபிவிருத்தி பணிகள், பூலாம்பாடி பேரூராட்சிக்கு புதிய அலுவலகக் கட்டிடம், பெரம்பலூர் நகராட்சிக்கு நவீன எரிவாயு தகன மேடை, பெரம்பலூரை மாநகராட்சியாக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். தி.மு.க. ஆட்சியில் எப்போதும் பெரம்பலூர்க்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவித்து செயல்படுத்தப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் என்பது மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் அறிவித்து மாவட்டம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் மகிழ்ச்சியடையும் வகையில் மாநகராட்சியாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாண்புமிகு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு, கழக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா.எம்.பி., போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பாராளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு, சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் மற்றும் உறுதுணையாக இருந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் பெரம்பலூர் மாவட்ட மக்களின் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பெரம்பலூர் மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.