விமான நிலையத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு வரவேற்பு
பாளையங்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமானம் வருகை தந்தார்.;
பாளையங்கோட்டை அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை குளம் விமானம் வருகை தந்தார். தென்காசி, பாளையங்கோட்டை தொகுதிகளின் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.கருப்பசாமி பாண்டியன் நேற்று உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் உடல் இன்று திருநெல்வேலியில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. ஆகவே, கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையம் வருகை தந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, சண்முகநாதன், ராஜேந்திர பாலாஜி, சி.த.செல்லப்பாண்டியன் உட்பட தொண்டர்கள் குவிந்தனர். பின்னர், விமான நிலையத்திலிருந்து கார் மூலம் திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டிற்கு அஞ்சலி செலுத்த சென்றார்.