அதிமுக மாநில அமைப்பு செயலாளரும் முன்னாள் எம்எல்ஏவுமான கருப்பசாமி பாண்டியன் நேற்று உயிரிழந்தார். அவரின் பூத உடலுக்கு இன்று (மார்ச் 27) அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்வின்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, இசக்கி சுப்பையா உள்ளிட்டா அதிமுகவினர் பலரும் கலந்து கொண்டனர்.