கரூரில் உயர் கல்வி பயில்வதற்கான கண்காட்சி நடைபெற்றது.
கரூரில் உயர் கல்வி பயில்வதற்கான கண்காட்சி நடைபெற்றது.;
கரூரில் உயர் கல்வி பயில்வதற்கான கண்காட்சி நடைபெற்றது. கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கரூர் கோவை சாலையில் உள்ள தனியார் கூட்டுரங்கில் பிளஸ் டூ முடித்த மாணாக்கர்களுக்கு உயர் கல்வி பயில்வதற்கான கண்காட்சி நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ் டூ தேர்வு முடிவுற்றதால் உயர்கல்வி பயில விரும்பும் மாணாக்கர்களுக்கு உதவிடும் வகையில் தனியார் நிறுவனங்கள் சார்பில் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில் பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் கல்வி நிறுவனங்கள் சார்பில் 50க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. மேலும், அந்த கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் மாணவர்களுக்கு தங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள கல்வி வாய்ப்பு, வேலை வாய்ப்பு மற்றும் சலுகைகள் குறித்து விபரங்களை எடுத்து கூறினார். மாணாக்கர்கள் தாங்கள் விரும்பும் கல்வி நிறுவனங்கள் மற்றும் கல்வி குறித்த பாடத்திட்டங்கள் குறித்து கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் அளித்த விபரங்களை தங்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு தெரிவிப்பதற்காக குறிப்பு எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ- மாணவியர்கள் கலந்து கொண்டனர்.