கூடலூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் திடீரென காட்டு யானை உலா வந்ததால் மக்கள் அச்சமடைந்தனர். கூடலூர் மட்டும் அதன் சுற்றுப்பகுதிகளில் காட் யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதியில் உலா வரும் காட்டு யானைகள் அதிகாலை நேரத்தில் பிரதான சாலைகளில் உலா வருகின்றன கடந்த வாரம் தொரப்பள்ளி பகுதியில் உலா வந்த காட்டு யானை ரேஷன் கடையை சூறையாடியது இந்த நிலையில் இன்று கூடலூரில் இருந்து மைசூர் செல்லக்கூடிய இப்பங்காடு பகுதியில் திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை சாலையில் உலா வந்தது இதனால் மக்கள் அச்சமடைந்தனர் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினர் காட்டு யானையை அடர்வன பகுதிக்குள் விரட்டினர் காட்டு யானை உலா வந்ததால் சிறிது நேரம் வாகனங்கள் நிறுத்தப்பட்டன.
