நீலகிரி திமுக மாவட்ட பொறுப்பாளர் நேரில் ஆய்வு
கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்;
நீலகிரி மாவட்டம் குன்னூரில் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு பேன்சி கடையில் பிடித்த தீ பரவி 15 கடைகள் எரிந்து சாம்பல் ஆனது பாதிப்புக்குள்ளான மார்க்கெட் பகுதியை பார்வையிட்டு திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் நகராட்சிக்கு சொந்தமான 800-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் பேன்சி கடையில் மின் கசிவு காரணமாக தீ பற்றியது பற்றிய தீ அருகிலுள்ள ஜவுளி கடையில் பரவியதால் தொடர்ந்து பெயிண்ட் கடை உள்பட நகைக் கடைகள் மொத்தம் 15 கடைகள் எரிந்து சாம்பல் ஆனது சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் என் எஸ் நிஷா ஆகியோர் நேற்று இரவு நேரில் வந்து பார்வையிட்டனர் மேலும் தீயை கட்டுக்குள் கொண்டு வர குன்னூர் ஊட்டி கோத்தகிரி மற்றும் அருவங்காடு வெட்டி மருந்து தொழிற்சாலை மற்றும் ராணுவ முகாமில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பிறகு அதிகாலை 3 மணி அளவில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர் இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மார்க்கெட் பகுதிக்கு சீல் வைத்தது இந்நிலையில் இன்று காலை திமுக மாவட்ட பொறுப்பாளர் கே எம் ராஜு சம்பவ பகுதிக்கு நேரில் வந்து பார்வையிட்டு பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஆறுதல் கூறினார் மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் விவரங்களை எடுத்துக் கோரி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.