ஒரு நாள் வேலை நிறுத்தம் உதகையில் மோட்டார் வாகன பழுது பார்க்கும் கடைகள் இன்று ஒரு நாள் மூடப்பட்டு மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் உதகை ஏடிசி பகுதியில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தினர். மோட்டார் வாகனங்கள் பழுது பார்ப்பதற்கு (வொர்க் ஷாப்) நிரந்தர இடம் தர வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். இதில் அனைத்து மோட்டார் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர் மேலும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றன
