நெல்லையில் இஸ்லாமியர்கள் புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு 30 நாட்கள் நோன்பு நோற்று வருகின்றனர். இந்த நோன்பானது இன்னும் சில நாட்களில் முடிவடைந்து ரம்ஜான் கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு சிறப்பு இரவான நேற்று பள்ளிவாசல்களில் லைலத்துல் கத்ர் இரவு தொழுகை நடைபெற்றது. அந்த வகையில் சந்தைப்பேட்டை பள்ளிவாசலில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.