அனுமதியின்றி காவல் மண்வெட்டி கடத்தல் குளமாக மாறிவரும் நிலங்களால் மக்கள் கவலை!

பொது பிரச்சனைகள்;

Update: 2025-03-28 04:23 GMT
  • whatsapp icon
விராலிமலை தாலுக்கா ஆம்பூர் பட்டி, மதயானைப்பட்டி ஆகிய ஊர்களில் காட்டாற்று படுக்கையிலிருந்து அனுமதி இன்றி மணல் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களில் இருந்து கிராவல் மண்வெட்டி கடத்தப்படுவது கடந்த சில மாதங்களாக வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதியில் சுமார் 10 அடி ஆழத்துக்கு பள்ளம் ஏற்பட்டு குளம் போல் காட்சியளிக்கிறது இதுபோல் ஆம்பூர் பட்டி நால்ரோடு வழியாக நள்ளிரவு அதிகாலை நேரங்களில் மணல் மற்றும் கிராவல் மண் லாரிகளில் கடத்தி செல்லப்படுவது குறித்து வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் குற்றம் சட்டி உள்ளனர். இது பற்றி புகார் வரவில்லை என்றார் அரசு கல்லாங்கு புறம்போக்கு இடத்தில் அதிக அளவில் கிராவல் மண்ணை வெட்டி கடத்தும் நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News