சாலை வசதி கேட்டு பொதுமக்கள் போராட்டம்

அருமனை;

Update: 2025-03-28 06:50 GMT
அருமனை  அருகே கோணத்துவலையில் உள்ள சாலையை பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்துகின்றனர். இது குறுகலான சாலையாக இருந்தது. இந்த சாலையை ஒட்டி அருமனை அரசு மருத்துவமனைக்கும் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு ஒரே சுற்று சுவர் இருந்து உள்ளது.       இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு அரசு மருத்துவமனை பகுதியில் உள்ள சுற்றுச்சுவர்  இடிந்து விழுந்தது. சுற்று சுவர்  பணி சீரமைப்பின் போது, பொதுமக்கள் அந்த பாதை  அகலத்தை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன் பேரில் பாதைக்கு இடம் ஒதுக்கி சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.       ஆனால் பள்ளியின் சுற்றுச்சூரை ஒட்டிய பாதை குறுகலாக இருந்தது. தற்போது பள்ளி சுற்றுச்சுவர்  இடிந்து விழுந்தது. தற்போது பள்ளி சுற்றுச்சுவர் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. எனவே பள்ளி சுற்றுப்புற பகுதியை அகலப்படுத்த வேண்டும் என கேட்டும்  அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், பாதை அகலப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி அந்த பகுதி உள்ள பொதுமக்கள் நேற்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடத்தினர்.       அவர்களிடம் அருமனை காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து ஊர் பொதுமக்கள் இன்று மாவட்ட கலெக்டரை சந்திக்க புறப்பட்டனர். கலெக்டர் பதில் வரும் வரை மதில் சுவர் கட்டக்கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News