தானியங்கி கேமரா பொருத்தம் பணியில் வனத்துறையினர்

24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் வனத்துறையினரின் குழு ஈடுபட்டு வருகின்றன;

Update: 2025-03-28 14:25 GMT
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் தோடர் பழங்குடியின இளைஞரை மர்ம விலங்கு தாக்கி உயிரிழந்த பகுதியில் தானியங்கி கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு வனவிலங்கை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரம். 30 பேர் 3 குழுக்களாக பிரிந்து 24 மணி நேரமும் ரோந்து பணியில் வனத்துறையினர் ஈடுப்பட்டு வருவதாக வனத்துறை தகவல்... அப்பகுதி மக்கள் தனியாக செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வெளியில் வருவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தல்... நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கொள்ளிக்கோடு மந்து வனப்பகுதியில் கல்லக்கொரை மந்து பகுதியை சேர்ந்த தோடர் பழங்குடியின மக்களான கேந்தர் குட்டன் என்பவரை வனவிலங்கு தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும், அச்சத்தையும் ஏற்ப்படுத்தியுள்ளது. இந்நிலையில் பழங்குடியின இளைஞரை வனவிலங்கு தாக்கி கொன்ற பகுதியில் 15 தானியங்கி கேமிராக்கள் பொருத்தப்பட்டு வனவிலங்கின் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் தெரிவித்த போது நேற்று முன்தினம் விறகு சேகரிப்பதற்க்காக அருகிலுள்ள வனப்பகுதிற்கு சென்றபோது வன விலங்கு தாக்கி உயிரிழந்துள்ளார். அவரை தாக்கியது புலியா, சிறுத்தையா என கண்காணித்து வருவதாகவும், 15 இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தியுள்ளதாகவும், அப்பகுதியில் தனியாக யாரும் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் 30 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார்.

Similar News