கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரியில் மிகப் பெரிய குளம் உள்ளது. இதில் ஏராளம் தாமரை இலைகள் உள்ளது. இந்த குளத்தில் நாகர்கோவில் ஒழுகினசேரி பகுதியைச் சார்ந்த ராசையா (29) மற்றும் அம்பாசமுத்திரம் வைராவிகுளம் பகுதியை சார்ந்த கருப்பசாமி (எ) குமார் (30) ஆகிய இருவர் தாமரை இலை மற்றும் பூக்களை பறித்து சாக்கு பையில் அடைத்துக்கொண்டிருந்தனர். இது குறித்த புகாரின் பேரில் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு பூதப்பாண்டி வனச்சரக அலுவலகம் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து மாவட்ட வன அலுவலர் மற்றும் வன உயிரின காப்பாளர் ஆகியோர் தெரிவிக்கையில், - புத்தேதி குளம் பறவைகள் பாதுகாப்பு குளமாக இருக்கும் பகுதியாகும். இந்த குளங்களில் சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.