மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்   

நாகர்கோவில்;

Update: 2025-03-28 15:05 GMT
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில்,    மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமையில்,  மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  இன்று  (28.03.2025) நடைபெற்றது.          கூட்டத்தில்   கடலில் விபத்துக்குள்ளாகும் மீனவ மக்களை பாதுகாத்திட கடல் ஆம்புலன்ஸ் திட்டத்தினை இம்மாவட்டத்தில்  செயல்படுத்திட  வேண்டும் எனவும், குறும்பனை பகுதியில் புதிய துறைமுகம் உடனடியாக அமைக்கப்பட வேண்டும் எனவும், வாணியக்குடி முதல் கொச்சி வரை பேரூந்து சேவை ஏற்படுத்தித்தர வேண்டும் எனவும்,   ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கவும்   கோரிக்கை விடுக்கப்பட்டது.        இதனை தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர், உதவி ஆட்சியர், பத்மநாபபுரம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (மண்டலம்) கன்னியாகுமரி மற்றும் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களால் பதில் விவரம் தெரிவிக்கப்பட்டது.    குறும்பனை  பகுதியில் துறைமுகம் அமைத்திட ரூ1.00 கோடி மதிப்பீட்டில் கருத்துரு சமர்ப்பிக்ப்பட்டு கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் ஒப்புதலுக்கு பின் திட்டம் நிறைவேற்றப்படும்  எனவும், வாணியக்குடி முதல் கொச்சி வரை பேரூந்து சேவை செய்திட சாத்திய கூறுகளை ஆய்ந்து தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும்,  ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைத்திட, நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பதில் தெரிவிக்கப்பட்டது. நடைபெற்ற கூட்டத்தில் பத்மநாபபுரம் உதவி ஆட்சியர் வினய்குமார் மீனா, நாகர்கோவில் வருவாய் கோட்டாசியர் எஸ்.காளீஸ்வரி,  அலுவலர்கள் மற்றும் மீனவ பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Similar News