கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட சுமங்கலி திருமண மண்டபத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், தமிழ்நாடு ஊரக மற்றும் வாழ்வாதார திட்டத்தின் கீழ் இன்று (28.03.2025) நடைபெற்ற மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயாரிப்பு பொருட்களை மாவட்ட அளவில் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு கூட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் மகளிர் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவில் வாங்குவோர் மற்றும் விற்போர் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் தயார் செய்த பொருள்களை தனியார் நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் நேரடியாக வாங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மகளிர் சுயஉதவிக் குழுவினர் உற்பத்தி செய்த பொருள்களான வாழைநார் பொருள்கள், பனைஓலை பொருள்கள், சணல் பொருள்கள், தேங்காய் ஒட்டினால் செய்த அழகு சாதன பொருள்கள், ஒயர் கூடை வகைகள், மண்பாண்ட பொருள்கள், ஆய்த்த ஆடைகள் மற்றும் உணவு பொருள்களான தேன், நல்லமிளகு, கிராம்பு, சத்துமாவு, வாழைக்காய் சிப்ஸ், பலாப்பழ சிப்ஸ், முந்திரி கொத்து, புளி, ஊறுகாய் வகைகள், ஜீஸ் வகைகள் மற்றும் சிறுதானிய பொருள்கள் உள்ளிட்டவைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. என பேசினார். நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க கன்னியாகுமரி மாவட்ட திட்ட இயக்குநர் மகளிர் திட்ட இயக்குநர் சா.பத்ஹூ முகம்மது நசீர், சுய உதவி குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.