கடல் பகுதியில் சஜாக் ஆபரேஷன் ஒத்திகை 

கன்னியாகுமரி;

Update: 2025-03-28 15:58 GMT
கன்னியாகுமரி கடல் பகுதி கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவல் மற்றும் சட்டவிரோத செயல்கள் உள்ளிட்டவற்றை தடுக்கும் விதமாக கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கன்னியாகுமரி கடல் பகுதியில் ஒவ்வொரு மாதமும் ‘சஜாக்’ஆபரேஷன் என்ற பாதுகாப்பு ஒத்திகையை நடத்துவது வழக்கம். இந்நிலையில் கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சார்பில் இன்று  பாதுகாப்பு ஒத்திகை நடந்தது. இதில் ஆரோக்கியபுரம்  இருந்து நீரோடி காலனி வரை அதிநவீன ரோந்து படகில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.   இந்த பாதுகாப்பு ஒத்திகை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடந்தது.மேலும்,குமரி மாவட்டத்தில் உள்ள 48 கடற்கரை கிராமங்களிலும் போலீசார் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அவர்கள்,கடலோர பாதுகாப்பு குழுமத்துக்கு சொந்தமான சின்னமுட்டம், மகாதானபுரம், பஞ்சலிங்கபுரம் உள்ளிட்ட  சோதனைச் சாவடிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.  இந்த பாதுகாப்பு ஒத்திகை கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையில் நடந்தது.

Similar News