கொல்லங்கோடு அருகே மஞ்சதோப்பு காலனி என்ற பகுதியை சேர்ந்தவர் சகாயராஜ். தூத்துக்குடி பகுதியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மரிய செல்வம் (62). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஒருவர் வெளி மாவட்டத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். மற்றொருவர் நாகர்கோவில் பகுதியில் ஒரு தனியார் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறார். கடந்த 25ஆம் தேதி காலையில் மரிய செல்வம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது, சேலையிலில் திடீரென தீப்பிடித்து உள்ளது. இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் மரிய செல்வத்தை மீட்டு திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த நிலையில் சிகிட்சை பலனின்றி நேற்று மரிய செல்வம் உயிரிழந்தார். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.