மத்திய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்கானூரரணியில் மத்திய அரசை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்;

Update: 2025-03-29 06:09 GMT
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே இன்று காலை 29.03.2025 சனிக்கிழமை மதுரை தெற்கு மாவட்ட திமுக திருமங்கலம் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் செக்கானூரணியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்திற்கான (MGNREGA) நிதி ரூ.4034 கோடியை தமிழ்நாட்டிற்கு வழங்காமல்- தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு ஒன்றிய அரசு கண்டித்து மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கண்டன உரையாற்றினார். இக்கண்டன கூட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள், திருமங்கலம் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

Similar News