கட்சிபெருமாள் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை
கட்சி பெருமாள் கிராமத்திற்கு பெயர் பலகை இல்லாததால் பெயர் பலகை வைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.;

அரியலூர், மார்ச்29- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கட்சி பெருமாள் கிராமத்தில் நெருப்பு பலகை இல்லாததால் பொதுமக்கள் குறிப்பாக பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.வெளியூர்களிலிருந்து வரும் நபர்களுக்கு ஊர் இருப்பது தெரியாமல் தெரு தூரம் சென்று பின்னர் விசாரித்து மீண்டும் வருகின்ற சூழல் ஏற்படுகிறது.இதனால் தூர விரயம் நேர விரையும் ஏற்படுவதால் கட்சிப் பெருமாள் கிராமத்தில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.