கவரப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

கவரப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-29 06:58 GMT
  • whatsapp icon
கவரப்பேட்டையில் மத்திய அரசை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கு கடந்த நான்கு மாதங்களாக 4034 கோடி ரூபாய் நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டையில் கும்மிடிப்பூண்டி கிழக்கு தெற்கு ஒன்றிய திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ் சைதை சித்திக் ஆகியோர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் திரளாக பெண்கள் தங்கள் கைகளில் பிரதமர் மோடியின் பதாகைகளை ஏந்தி கண்டன கோசங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று மெதூர் மாதர்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Similar News