ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்;
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை செய்பவர்களுக்குவழங்க வேண்டிய 4034 கோடி ரூபாய் பணத்தை வழங்காத மோடி அரசை கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்தந்த பகுதி ஒன்றிய செயலாளர் தலைமை தாங்கினார்கள். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திமுக ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல் தலைமை தாங்கினார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை திட்டத்தில் வழங்க வேண்டிய நாலாயிரத்து முப்பத்தி நாலு கோடி ரூபாயை உடனே வழங்க வலியுறுத்தியும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் ஒன்றிய மோடி அரசை கண்டித்தும், முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மோடி அரசுக்கு எதிராகவும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்ட சம்பளத்தை வழங்க வலியுறுத்தியும், பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பட்லூர் பகுதியைச் சேர்ந்த ராணி என்ற மூதாட்டி பேசும்போது எங்கள் பணத்தை வாங்கி வைத்துக் கொண்டு சம்பளம் கொடுக்க மாட்டேன் என்று சொல்வதற்கு மோடியே நீ யார் உங்கள் பகுதியிலிருந்து உங்கள் மக்கள் தமிழ்நாட்டிற்கு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் எங்கள் மாணவர்கள் படிப்பதற்கு கொடுக்க வேண்டிய பணத்தை கொடுக்க மறுப்பது நியாயமா என்று கேள்வி எழுப்பினார் தங்களுக்கு எட்டு மாதமாக சம்பளம் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டினார். இதனை உடனே வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதனை கேட்டு மற்றவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில திமுக வலைதள துணை செயலாளர் திருநங்கை ரியா மாவட்ட மரபு சாரா ஓட்டுநர்கள் அணி அமைப்பாளர் ராஜபாண்டி ராஜவேல், உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.