உத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா

ஜெயங்கொண்டம் அருகே உத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது.;

Update: 2025-03-29 07:08 GMT
உத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் ஆண்டு விழா
  • whatsapp icon
அரியலூர், மார்ச்29- ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட உத்திரக்குடி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் சுபா தலைமையேற்க, ஆசிரியர் பயிற்றுநர் தாமோதரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் பாராட்டு சான்றிதழ் வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் சக ஆசிரியர் சரவணன், பள்ளிக்கல்வி மேலாண்மை குழு தலைவர் வனிதா, துணைத் தலைவர் தூதுவன் சுரேஷ், சத்துணவு அமைப்பாளர், காலை உணவு திட்ட பொறுப்பாளர், வார்டு உறுப்பினர் வளர்மதி, முன்னாள் வார்டு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Similar News