புதுக்கோட்டை மாவட்டம் அரசர்குளம் கீழ்பாதியில் மத்திய பாஜக அரசை கண்டித்து திமுக மேற்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய செயலாளர் குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூடத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்கள் எழுப்பினர்.