உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்;

Update: 2025-03-29 10:51 GMT
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம்
  • whatsapp icon
உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம்! செங்கல்பட்டு மாவட்டம், கள்ளபிரான் புரம், பழமத்தூர் ஆகிய பகுதிகளில் உலக தண்ணீர் தினம் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்கள் சித்ரா தனசேகர், ஜோதி முருகானந்தம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த கிராம சபை கூட்டத்தில் தண்ணீர் அவசியம் குறித்தும், தண்ணீரை எவ்வாறு சேகரிக்க வேண்டும், நீர் நிலைகளை பாதுகாப்பது குறித்தும், மழை நீர் சேகரிப்பின் முக்கியத்துவம் குறித்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலைஞர் கனவு இல்ல திட்டங்களின் பயன்கள் தேர்வு செய்தல், மற்றும் திட்ட பணிகளை உறுதி செய்தல் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த கிராம சபை கூட்டத்தில் வார்டு உறுப்பினர்கள், வருவாய்த்துறையினர், சத்துணவு அமைப்பாளர்கள், உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Similar News