கரூரில் கோடையின் தாக்கத்தை குறைக்க மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் துவக்கி வைத்தார்.

கரூரில் கோடையின் தாக்கத்தை குறைக்க மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் துவக்கி வைத்தார்.;

Update: 2025-03-29 11:02 GMT
  • whatsapp icon
கரூரில் கோடையின் தாக்கத்தை குறைக்க மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைச்சர் துவக்கி வைத்தார். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அண்மைக்காலமாக கோடை காலம் துவங்கியது முதலே கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. ஒவ்வொரு கோடை காலம் துவங்கும் போதும், கரூர் மாவட்டத்தில் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து கோடைகாலம் முழுவதும் நீர் மோர் வழங்குவது வழக்கம். அதன் அடிப்படையில் இன்று கரூர் பேருந்து நிலையம் மனோகரா கார்னர் அருகே கரூர் மாவட்ட திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா கரூர் மாவட்ட திமுக செயலாளரும், தமிழக மின்சார துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்றது. இன்று முதல் நாள் என்பதால் இளநீர், வெள்ளரிக்காய், ரஸ்னா, தர்பூசணி, நீர்,மோர் வழங்கும் நிகழ்ச்சியை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார். கரூர் நகரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, முண்டியடித்து கோடையை தணிக்கும் பொருட்களை அமைச்சரிடம் வாங்கி, அருந்தி மகிழ்ந்தனர். இதே போல திமுக வடக்கு மாநகரம் சார்பில் வெங்கமேடு பகுதியில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலையும் திறந்து வைத்து பொதுமக்களுக்கு கோடையை தணிக்க வல்ல பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் செந்தில் பாலாஜி. இந்த நிகழ்ச்சியில் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News