கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச. உமா, தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.;

Update: 2025-03-29 11:31 GMT
கிராம சபை கூட்டத்தில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர்.
  • whatsapp icon
நாமக்கல் மாவட்டம், கபிலர்மலை ஊராட்சி ஒன்றியம், சிறுநல்லிகோவில் ஊராட்சியில் இன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்கள். குறிப்பாக மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தை தொடங்கி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ”மீண்டும் மஞ்சப்பை" திட்டத்தின் மூலம் நீர், நிலம், காற்று மாசுபாடு குறைத்து, நெகிழிப் பயன்பாடு இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். மஞ்சப் பை சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் அடையாளம் என்னும் வகையில், நெகிழிப் பைகளை முற்றிலும் தவிர்த்துத் துணிப்பை மற்றும் பாத்திரங்கள் கொண்டு செல்லும் பழக்கத்திற்குப் பொதுமக்கள் அனைவரும் மாற வேண்டும். கழிவுகளை மக்கும் கழிவு, மக்காத கழிவு என பிரித்துத் தூய்மைப் பணியாளர்களிடம் கொடுக்கும் பழக்கத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். கழிவுகளை தீ வைத்து எரிக்கும் பழக்கத்தை முற்றிலும் தவிர்ப்போம். முடிந்தவரை கழிவுகளை மறுசுழற்சிக்குப் பயன்படுத்துவோம். மக்கும் கழிவுகளை இயற்கை உரமாக மாற்றி பயன்படுத்துவோம். குளம், குட்டை, ஏரி போன்ற நீர்நிலைகளை தூர்வாரி அதில் தூய மழைநீர் சேமிப்போம். கழிவுகளை நீர்வழிப்பாதை மற்றும் நீர்நிலைகளில் கொட்டுவதைத் தவிர்ப்போம்.' எனவே, பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு நல்கி மாசில்லாத் தமிழ்நாட்டை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம். நாமக்கல் மாவட்டத்தை நெகிழி இல்லாத மாவட்டமாக உருவாக்கிட அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் தலைமையில் பசுமை உறுதிமொழியான ”நான் புவியையும் அதன் இயற்கைச்சூழலையும் என்னால் இயன்றவரை பாதுகாப்பேன். நான் கழிவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வேன். நான் எதையெல்லாம் மீண்டும் பயன்படுத்தமுடியுமோ, அவ்வண்ணமே செய்வேன். சுற்றுச்சூழலை தூய்மைப்படுத்துவதில் நான் கவனம் செலுத்துவேன். நாம் உருவாக்கும் கழிவுகளைக் குறைக்க நான் நடவடிக்கை எடுப்பேன். நான் அதிகமாக மரங்களை நடுவேன். நான் ஆற்றல் மற்றும் தண்ணீரைப் பாதுகாத்து பேணுவேன். பசுமை நற்குணங்களைக் கடைப்பிடிப்பேன்” என்ற உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். சிறப்பு கிராம சபை கூட்டத்தில் உலக தண்ணீர் தினத்தின் கருப்பொருளினைப் பற்றி விவாதித்தல். கிராம ஊராட்சி நிருவாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து அறிக்கை. கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை. சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து சிறப்பு செய்து, பொதுமக்களுக்கு மஞ்சப் பைகளை வழங்கினார். மேலும், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். மேலும், சிறப்பு கிராம சபை கூட்டத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், நோயாளிகள் வருகை விபரம், கர்ப்பிணித்தாய்மார்கள் பதிவு விபரம், மருந்துகளின் இருப்பு, ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகள் விபரம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடினார்.இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) கு.செல்வராசு, வேளாண்மை இணை இயக்குநர் .பெ.கலைச்செல்வி, தோட்டக்கலைத் துணை இயக்குநர் மா.புவனேஷ்வரி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Similar News