வேலூர்: ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் போராட்டம்!
வேலூரில் ஒன்றிய அரசை கண்டித்து திமுகவினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு முழக்கங்களை எழுப்பினர்.;

வேலூரில் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு 100 நாள் வேலை உறுதி திட்டத்திற்கு ரூ.4000 கோடி நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து மாபெரும் போராட்டத்தில் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கே. ரவி தலைமை தாங்கினார். இதில் நகர திமுக செயலாளர் எஸ் .சௌந்தராஜன் , நகர, ஒன்றிய, கழக அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் மகளிர் அணியினர் கலந்து கொண்டனர்.