ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வேடசந்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கோவிலூரில் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-29 13:01 GMT
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
தமிழ்நாடு முழுவதும் 100 நாள் வேலை திட்டப் பணிக்கு நிதி தராத ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தெற்கு ஒன்றியம் சார்பில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.    இந்நிகழ்ச்சிக்கு தெற்கு ஒன்றிய செயலாளர் வீரா. எஸ்.டி.சாமிநாதன் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி பாலு, ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணி, ஊராட்சி செயலாளர் முருகேசன், கிளைச் செயலாளர் திருமுருகன், தொண்டரணி செந்தில் போன்ற கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 300-க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் வஞ்சிக்காதே வஞ்சிக்காதே தமிழ்நாட்டை வஞ்சிக்காதே! அடிக்காதே அடிக்காதே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! சம்பள காசை திருடாதே ஏழைகள் வயிற்றில் அடிக்காதே! மோடி...மோடி என்னாச்சு எங்க பணம் 4000 கோடி? சம்பளம் கொடு சம்பளம் கொடு... 100 நாள் வேலைக்கான சம்பளம் கொடு. பாஜக அரசே பதில் சொல். . 100 நாள் சம்பள பணம் வருமான்னு பதில் சொல்! மாசம் 1000 கொடுக்கிறாரு ஸ்டாலினு எங்க சம்பளத்தை கூட புடுங்குறாரு மோடி! பணக்கார முதலாளிக்கு வரித்தள்ளுபடி ஏழை மக்களுக்கு சம்பளப்பிடிப்பா? என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Similar News