மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு சட்டத் தொழிலாளர்கள் சங்கத்தினர் சார்பில் மத்திய அரசு கண்டித்து ஆர்ப்பாட்டம்;
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று மாலை நடைபெற்றது.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் பணியாற்றிய கிராமப்புற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 2024-நவம்பர்,டிசம்பர்,2025-ஜனவரி,பிப்ரவரி, மார்ச் ஆகிய ஐந்து மாதங்களுக்கு வழங்க வேண்டி தின சம்பளம் ரூ2,985/- கோடியை உடனே வேண்டும். 2025 2026 நிதியாண்டிற்கு 4.5 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். ஆண்டுக்கு 200 நாள் வேலை தின சம்பளம் 700 ரூபாய் வழங்க வேண்டும். பணி செய்யும் இடத்தில் நிழல் கூடம். குழந்தைகளுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும் ஒகேனக்கல் குடி தண்ணீர். குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் வேலை வேண்டி விண்ணப்பங்களை ஊராட்சி செயலாளர் பெற்று தனி பதிவேட்டில் பதிவு செய்து வேலை வழங்க வேண்டும் 100 நாள் பணி முடித்த பணிதள பொறுப்பாளர்கள் மாற்ற வேண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தருமபுரி மாவட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்ட தொழிலாளர் சங்கம் ஒருங்கிணைப்பாளர் பிரதாபன் தலைமை வகித்தார். முன்னிலையாக மாதப்பன். மற்றும் நிர்வாகிகள் மல்லையப்பன் ராஜ் கிருஷ்ணன் அலமேலு ராஜகோபால் பச்சையப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.