கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல் அருகே கள்ளிப்பட்டி ஊராட்சி நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்;

Update: 2025-03-29 13:05 GMT
கண்களில் கருப்பு துணி கட்டி கண்டன ஆர்ப்பாட்டம்
  • whatsapp icon
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி சார்பில் இன்று 29.03.25 கிராம சபை கூட்டம் கள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்திற்கு செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார். இந்த கிராமசபை கூட்டத்தில் செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம் கணக்குத் தாக்கல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகித்தினை உறுதி செய்வது குறித்த விவாதம், கலைஞர் கனவு இல்ல திட்ட பயனாளிகள் பட்டியல் ஒப்புதல் பெறுதல் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கிராமசபை கூட்டம் நடைபெறுவதற்கு முன்பாக 100 நாள் திட்டத்தில் பணிபுரியக்கூடிய பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்திற்கு நிதி வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்களில் கருப்பு துணியை கட்டி நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர் அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராகவும் பிரதமர் மோடிக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர்.

Similar News