ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை!

ரம்ஜான், பக்ரீத், பொங்கல், தீபாவளி, ஆகிய பண்டிகை காலங்களில் நாமக்கல் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும்;

Update: 2025-03-29 13:26 GMT
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை!
  • whatsapp icon
நாடு முழுவதும் வருகிற மார்ச் 31ம் தேதி (திங்கள்கிழமை) ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ஈகை திருநாள் என்றழைக்கப்படும் இந்த நாளில் ஏழைகளுக்கு புத்தாடை, அசைவ உணவு வகைகளை இஸ்லாமியர்கள் வழங்கி மகிழ்வர்.ரம்ஜான் அன்று காலை 7 மணியளவில் ஈத்கா மைதானத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிறப்புத் தொழுகையை மேற்கொள்வர்.இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள கால்நடை சந்தைகளில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடந்து வருகிறது.
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது.ரம்ஜான், பக்ரீத், பொங்கல், தீபாவளி, ஆகிய பண்டிகை காலங்களில் நாமக்கல் வாரச்சந்தையில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெறும் அந்த வகையில் (மார்ச் 29 சனிக்கிழமை) அதிகாலை 5 மணி முதலே ஆடுகள் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது.
பென்னாகரம், மேச்சேரி,மேட்டூர், தருமபுரி,சேலம், ஓமலூர், நாமக்கல், துறையூர்,பவித்திரம்,பேளுக்குறிச்சி, சேந்தமங்கலம், கொல்லிமலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில்,நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர்.மொத்த எடை அடிப்படையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது. ரம்ஜானை முன்னிட்டு ரூ.1.50 கோடி வரையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனாலும்,கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விற்பனை குறைந்த விட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Similar News