உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், கலெக்டர் பங்கேற்பு

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம், கலெக்டர் பங்கேற்பு;

Update: 2025-03-29 13:43 GMT
  • whatsapp icon
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியம், பெருமாட்டுநல்லூர் ஊராட்சியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் தலைமையில் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ச.அருண்ராஜ், இ.ஆ.ப. முன்னிலை வகித்தார்..உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) வெ.ச.நாராயண சர்மா, இ.ஆ.ப., காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், மகளிர் திட்ட இயக்குநர் லோகநாயகி, மாவட்ட வழங்கல் அலுவலர் சாகிதா பர்வீன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அகிலா தேவி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) விக்னேஷ், உதவி இயக்குனர் (கலால்) .ராஜன் பாபு, இணை இயக்குனர் (வேளாண்மை) பிரேம் சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ராஜேஸ்வரி, பெருமாட்டுநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பகவதி நாகராஜன் ,காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் லோகநாதன்,ஊராட்சி மன்ற தலைவர்கள் துணைத் தலைவர்கள்,மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News