அமைச்சர் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
பித்தளைப்பட்டி பிரிவு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பித்தளைப்பட்டி பிரிவு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் மோடி அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய ரூபாய் 4034 கோடி ரூபாய் நிதியை தராமல் வஞ்சிக்கும் மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். ஆத்தூர் ஒன்றிய செயலாளர முருகேசன் பித்தளைப்பட்டி முன்னாள் தலைவர் உலகநாதன் வழக்கறிஞர் காமாட்சி மற்றும் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி.