நாமக்கல்: ரம்ஜான் நோன்பு திறப்பு ராமலிங்கம் எம்எல்ஏ பங்கேற்பு!
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.;

நாமக்கல் செல்லப்பா காலனியில் உள்ள மஸ்ஜிதே மஹ்மூத் மசூதியில் திமுக மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு சார்பாக ரம்ஜான் பண்டிகைக்காக நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.ராமலிங்கம் எம்எல்ஏ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.இந்நிகழ்ச்சியில் நாமக்கல் ஒன்றிய திமுக செயலாளர் பழனிவேல், நாமக்கல் கிழக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு மாவட்ட நிர்வாகிகள் சம்பத்,நாசர்பாஷா, ஃபைரோஸ், மார்ட்டின்,பள்ளிவாசல் நிர்வாகிகள் சலீம், சானவாஸ்,அமீர் ஆகியோர் உடனிருந்தனர்.