உணவு வளாகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்ஆர் ராசா திறந்து வைத்து பார்வையிட்டார்

அரசு அதிகாரிகள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்;

Update: 2025-03-29 15:34 GMT
உணவு வளாகத்தை நாடாளுமன்ற உறுப்பினர்ஆர் ராசா திறந்து வைத்து பார்வையிட்டார்
  • whatsapp icon
நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில், "ஆவின் புட்டீஸ்” என்னும் புதிய உணவு வளாகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.இராசா அவர்கள் திறந்து வைத்து, பார்வையிட்டார். நீலகிரி மாவட்டம், உதகை ஆவின் வளாகத்தில், “ஆவின் புட்டீஸ்” என்னும் புதிய உணவு வளாகத்தை நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் .ஆ.இராசா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள், முன்னிலையில் இன்று திறந்து வைத்து, பார்வையிட்டார். க ஆவின் நிறுவனத்தில், சார்பில், நெய் பால்கோவா, குளிர்பானங்கள், இதர பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. தற்போது இன்று புதியதாக திறக்கப்பட்ட ஆவின் புட்டீஸ் உணவகத்தில், பொது மக்கள் மற்றும் சுற்றுளா பயணிகளை கவரும் வகையில் உயர்தர உணவு வகைகளான பன்னீர் சில்லி, பிங்கர் பன்னீர் உள்ளிட்ட பொருட்கள் விற்கப்படுகிறது. முன்னதாக, நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள், எதிர்வரும் 06.04.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தேசிய ஊரக வளர்ச்சி வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியுதவியில் ஆவின் வளாகத்தில், பதப்படுத்தப்பட்ட பாலாடைக்கட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை அடிக்கல் நாட்ட உள்ளதை முன்னிட்டு, நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில், ஆவின் பொது மேலாளர் மரு.ஜெயராமன், உதகை வருவாய் கோட்டாட்சியர் திரு.சதீஷ், உதகை நகரமன்ற துணைத்தலைவர் திரு.ரவிக்குமார் ஆவின் பணியாளர்கள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News