குள்ளஞ்சாவடி: திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
குள்ளஞ்சாவடியில் திமுகவினர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் குள்ளஞ்சாவடி நான்கு முனை சந்திப்பு பகுதியில் குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார் தலைமையில், 100 நாள் வேலை உறுதித் திட்ட நிதி ரூ.4000 கோடியை தராமல் தொடர்ந்து தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. அதில் திமுக தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.