வடக்குத்து: எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
வடக்குத்து ஊராட்சியில் நெய்வேலி எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

100 நாள் வேலை உறுதி திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய ரூ.4034 கோடி நிதியை வழங்காமல் தமிழ்நாட்டை தொடர்ச்சியாக வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து ஊராட்சியில் நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா.இராசேந்திரன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது.