கோவை: அதிமுக பூத் கமிட்டி கூட்டத்தில் மோதல் !

கஸ்தூரிபாளையம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது.இதில் அதிமுக திமுகவினரிடையே மோதல்.;

Update: 2025-03-31 02:54 GMT
  • whatsapp icon
கோவை மாவட்டம், கஸ்தூரிபாளையம் பகுதியில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சில நாட்களுக்கு முன்பு திமுகவில் இருந்து அதிமுகவிற்கு மாறிய பாபு என்பவர் கலந்து கொண்டார். கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று திமுக பெரியநாயக்கன்பாளையம் நகர செயலாளரும் பேரூராட்சி தலைவருமான விஸ்வ பிரகாஷ் கேட்டுள்ளார். இதற்கு பாபு தகவல் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறின் போது, விஸ்வ பிரகாஷ் பாபுவை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் விஸ்வ பிரகாஷிற்கு காயம் ஏற்பட்டது. மேலும் பாபுவின் வீட்டிற்கு சென்று திமுகவினர் அவரது குடும்பத்தினரையும் தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்களை அதிமுக நகர செயலாளர் ரகுநாதன் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்ற திமுகவினர் ரகுநாதனையும் தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுகவினர் மேட்டுப்பாளையம் கோவை சாலையில் ஜோதிபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல், திமுகவினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Similar News