ரமலான் பண்டிகை: ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை!
தூத்துக்குடி; ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு ஈத்கா தோட்டத்தில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் உலக அமைதி சகோதரத்துவம் இயற்கை பேரிடர்கள் இருந்து உலக மக்களை காக்க வேண்டி ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்;

ரம்ஜான் பண்டிகை இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தூத்துக்குடியில் உள்ள ஈத் கா தோட்டத்தில் உலக அமைதி, சமாதானம் உடல் , மன ஆரோக்கியம் பேரிடர்களில் இருந்து மக்களை காக்க வேண்டும் என சிறப்பு தொழுகை நடைபெற்றது. தூத்துக்குடி ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் ஆலிம் தலைமையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து ஒன்று கூடி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறி தக்பீர் கட்டி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்குப் பின்பு ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். மேலும் நோன்பு பெருநாளான இன்று உணவில்லாமல் யாரும் இருக்கக் கூடாது என்பதை வலியுறுத்தி நோன்பின் மகிமையை அறிந்து அனைவரும் எளியவர்களுக்கு உதவ வேண்டுமென அரசு காஜி முஜிபுர் ரகுமான் எடுத்துரைத்தார். உலக அமைதி சகோதரத்துவம் இயற்கை பேரிடர்கள் இருந்து உலக மக்களை காக்க வேண்டி இமாம் சதக்கத்துல்லா சிறப்பு துவா செய்தார். இந்த நிகழ்ச்சியில் ஜாமியா பள்ளிவாசல் நிர்வாக சபை தலைவர் மிராசா மறைக்கார், துணைத்தலைவர் சாகுல் சிராஜுதீன், செயலாளர் எம் எஸ் எஃப் ரகுமான், பொருளாளர் மூஸா, கிரசன்ட் பள்ளி செயலாளர் முகமது உவைஸ், முஸ்லிம் சமுதாய சங்கத் தலைவர் ஏ.கே. மைதீன், சமூக ஆர்வலர் சம்சுதீன், கிதர் பிஸ்மி, H. M. மீராஷா, ஜாபீர், பீர்மைதீன், மீரான், A to Z கரீம், ஜாபர், ரசாக், medro ஷேக், ஸ்டார் மொபைல் முகமத் குட்டி, வழக்கறிஞர் அஜீஸ், நூர்தின் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான இஸ்லாமிய மக்கள் கலந்து கொண்டனர்.