இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசை கண்டித்து மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது;

Update: 2025-03-31 08:06 GMT
தமிழக மீனவர்களை கைது செய்து வரும் இலங்கை அரசை கண்டித்து தூத்துக்குடி மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் மீன்பிடி துறைமுகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  தமிழக மீனவர் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் மற்றும் மீனவர்களை கைது செய்து படகுகளை பறிமுதல் செய்து வரும் இலங்கை அரசை கண்டித்தும் தமிழக மக்கள் நலன் மற்றும் மாநில உரிமைகளை பறிக்கும் மத்திய அரசை கண்டித்தும் தூத்துக்குடியில் மாவட்ட அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  அனைத்து விசைப்படகு தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ஜவகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மீனவர்கள் மற்றும் பல்வேறு ஜனநாயக அமைப்பைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கண்டன கோசங்களை எழுப்பினர். இலங்கைக்கு செல்லும் பாரத பிரதமர் நரேந்திர மோடி இந்த பிரச்சனை தொடர்பாக இலங்கை அரசு மற்றும் மீன்வளத் துறை அமைச்சருடன் பேசி இந்த பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

Similar News