நகராட்சி முழுவதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும்,
நகராட்சி முழுவதும் தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றினர்.;

அரியலூர், மார்ச்.31- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஜெயங்கொண்டம் நகர கிளை மாநாடு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மூத்த நிர்வாகி சேகர் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ராமநாதன் சிறப்புரையாற்றினார். நகரச் செயலாளர் பன்னீர்செல்வம், காத்தவராயன், இறைக்கோ, ரவிச்சந்திரன், மதியழகன், ராமன், ஆனந்தகுமார், சேரஅரசு உள்ளிட்ட பலர் கூட்டத்தில் கலந்து கொண்டனர். ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் கேண்டீன் திறக்க வேண்டும், செங்குந்தபுரம் மற்றும் நகராட்சி முழுவதும் தெரு நாய்கள் தொல்லை கூடுதலாக உள்ளது நடவடிக்கை எடுக்க வேண்டும், சார் பதிவகத்தை பழைய நீதிமன்றம் இருந்த இடத்தில் மாற்ற வேண்டும், பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி குடி இருப்போருக்கே அரசு பட்டா வழங்கிட வேண்டும், ஒரு லிட்டர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் செயலாளராக பன்னீர்செல்வம், நகர துணை செயலாளராக காத்தவராயன், பொருளாளராக சேகர் ஆகியோர் புதிய நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக்கூட்டத்தில் நகர பொறுப்பாளர்கள் கிளை பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் பல நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ரவிச்சந்திரன் நன்றி கூறினார்.