கோவிந்தபுத்தூர் நடுநிலைப் பள்ளியில், ஆண்டு விழா பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர்
கோவிந்தபுத்தூர் நடுநிலைப் பள்ளியில், ஆண்டு விழா பல்வேறு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து துறை அமைச்சர் பரிசு வழங்கினார்;
அரியலூர், மார்ச்.31- அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோவிந்தபுத்தூர் நடுநிலைப் பள்ளியில், அரியலூர் மாவட்டம் பள்ளிக் கல்வித்துறை ,பள்ளி நிர்வாகம் சார்பில், 2024 - 2025 -ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழா நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழா, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழா பள்ளி தலைமை ஆசிரியர் எழிலரசி தலைமை வகித்தார். போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். மேலும் பள்ளியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.நிகழ்ச்சியில் தா.பழூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் தனவேல், திருபுரந்தான் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர் உலகநாதன், பொதுக்குழு முன்னாள் உறுப்பினர் அண்ணாதுரை, தலைமை கழக பேச்சாளர் இளஞ்செழியன் மற்றும் தா.பழூர் மேற்கு ஒன்றிய கழக நிர்வாகிகள், இருபால் ஆசிரியர்கள்,மாணவ,மாணவிகள், ,முன்னாள் மாணவர்கள்,பொதுமக்கள் கலந்துகொண்டனர்.