மாநில அளவிலான வாலிபால் போட்டி அறிவிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கழக நிர்வாகிகள் பங்கேற்பு;

மாநில அளவிலான வாலிபால் போட்டி அறிவிப்பு தமிழக மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு ரூபாய் 77 ஆயிரம் பரிசுத்தொகை கொண்ட மாநில அளவிலான வாலிபால் போட்டி செந்துறை வடக்கு ஒன்றியம் குழுமூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குழுமூர் ஊராட்சியில் நடைபெறும் நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட அதிமுக செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்று நடத்த உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.