
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை தாலுகா சீவலப்பேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை கிராமத்தில் கடந்த சில நாட்களாக சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு வரை மஞ்சள் காமாலை நோய் பரவலாக பரவி வருகின்றது. இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்து சுகாதாரத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.