சேலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி

போலீசார் விசாரணை;

Update: 2025-04-01 03:44 GMT
சேலம் அருகே ஆட்டோ கவிழ்ந்து முதியவர் பலி
  • whatsapp icon
சேலம் அருகே வலசையூர் பகுதியை சேர்ந்தவர் அருணாசலம் (வயது 64). இவர் நேற்று முன்தினம் வீராணத்தில் இருந்து வலசையூருக்கு ஆட்டோவில் வந்தார். இதில் 4 பேர் பயணம் செய்தனர். ஆட்டோவை வலசையூரை சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டினார். ஆட்டோ, வீராணம் பகுதியில் தனியார் பள்ளி அருகில் இருந்த வளைவில் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அருணாசலம் ஆட்டோவிற்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனையில் அருணாசலம் வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இந்த விபத்தில் மற்றவர்கள் காயமின்றி உயிர்தப்பினர். விபத்து குறித்து வீராணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Similar News