கீழநாட்டியிருப்பு அம்மன் கோயிலில்

பங்குனி பெருவிழா பால்குடம் ஊர்வலம்;

Update: 2025-04-01 04:55 GMT
நாகை மாவட்டம் திருக்குவளை வட்டம் கீழ நாட்டிருப்பு கிராமத்தில், அருள்மிகு சியாமளாதேவி  மாரியம்மன், வீரமாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில், பங்குனி பெருவிழா, கடந்த மார்ச் 23 -ம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடக்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான, பால்குட ஊர்வலம் திருக்குவளை தியாகராஜ சுவாமி கோயிலில் இருந்து புறப்பட்டது. விரதம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடங்களை சுமந்தும், அலகு குத்தியும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரமுள்ள கோவிலை வந்தடைந்து, பின்னர், பக்தர்கள் கொண்டு வந்த பால் கொண்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. ‌இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Similar News