திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது:மு. அமைச்சர்
தமிழகத்தில் 100 நாள் பணிகளில் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு;
தமிழகத்தில் 100 நாள் பணிகளில் போராட்டம் என்ற பெயரில் திமுக அரசு நூறு நாள் பணியாளர்களை வைத்து நாடகம் ஆடுகிறது திமுக அரசு முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றச்சாட்டு திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணியசாமி திருக்கோயில் முருகப்பெருமானின் பிரசித்தி பெற்ற ஐந்தாம் படை திருக்கோயிலாகும் இந்த திருக்கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி தனது ஆதரவாளர்கள் 50 பேருடன் வந்திருந்தார் முருகன் கோயில் சாமி தரிசனம் செய்த அவருக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் மலர் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியது தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக ஒருங்கிணைப்பாக செயல்பட்டு வருகிறது அதிமுக பொதுச்செயலாளராக அதிமுக அடிமட்ட தொண்டர் முதல் அனைவரும் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தில் 100 நாள் பணியாளர்களை வைத்து போராட்டம் என்ற பெயரில் மத்திய அரசை குற்றம் சாட்டி நாடகம் ஆடி வருகிறது திமுக அரசு நல்ல விஷயத்திற்கு போராட்டம் நடத்தினால் பரவாயில்லை இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று நாடகம் ஆடி வருகிறார்கள் இந்த திமுக அரசு என்று பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்தார் தமிழகத்தில் நீட் தேர்வு திறந்து விட்டவர் எடப்பாடி தான் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் பேசியதற்கு நீட் தேர்வு வருவதற்கு காங்கிரஸ் கட்சியும் அதனுடன் மத்தியில் கூட்டணியில் இருந்த திமுக அரசும் தான் காரணம் இப்படி நாடக மாடி எடப்பாடி பழனிச்சாமி மீது பழி போடுவது முழு பூசணிக்காயை சோத்தில் மறைப்பதற்கு சமமாகும் பொய்களை மட்டுமே பேசி தமிழக மக்களை ஏமாற்றி மீண்டும் ஆட்சிக்கு வந்து விடலாம் என்று கனவு காண்கின்றனர் இந்த திமுகவை சேர்ந்த பொய்யர்கள் என்று சாடினார் தமிழகத்தில் சமீபத்தில் வெளியான கருத்துக்கணிப்பில் திமுக சார்பில் 2026 இல் மீண்டும் முதலமைச்சராக மு க ஸ்டாலின் அவருக்கு முதலிடமும் மூன்றாவது இடத்தில் எடப்பாடி பழனிச்சாமையும் என்று கூறியதற்கு அது கருத்து கணிப்பு அல்ல கருத்து திணிப்பு தற்போது வரை தமிழகத்தில் வந்து கொண்டிருக்கும் அனைத்து கருத்துக் கணிப்புகளும் எடப்பாடி பழனிச்சாமி தான் முதலிடத்தில் உள்ளார் என்று முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்